Type Here to Get Search Results !

2024-2025-ஆம் ஆண்டிற்கு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான 2024-2025-ஆம் ஆண்டிற்கு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான 2024-2025 ஆம் ஆண்டிற்கு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.08.2024) நடைபெற்றது.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக பள்ளி கல்லூரி, பொதுப்பிரிவு. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் கோப்பை சிறப்பாக நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 


முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை அதற்குரிய கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் 25.08.2024-க்குள் பதிவு செய்ய வேண்டும். 2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அனைத்து நடைமுறைகள் மற்றும் விதிகளையும் பின்பற்றி பல்வேறு துறைகளுடன் ஒருங்ணைந்து நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாற்றுதிறனாளி நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மருத்துவக்கல்லூரி உள்ளிருப்பு மருத்துவர் திரு.நாகேந்திரன், காவல்துறை, மருத்துவத்துறை, பள்ளிகல்வித்துறை, உடற்கல்வித்துறை, நகராட்சித்துறை, கல்லூரிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies