தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின் வாக்காளர்களுக்கு தர்மபுரி திமுக எம்பி மணி அவர்கள் இன்று காலை 11.50 மணிக்கு நன்றி தெரிவித்தார் முன்னதாக, தாளநத்தம் ஊராட்சியில் அதிகப்படியான மக்கள் தொகைக்கு ஏற்ப மேம்பாலம், ஆரம்ப சுகாதார நிலையம் குடிநீர் டேங். சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என பேசினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஒன்றிய செயலாளர் நெப்போலியன் சிவப்பிரகாசம், ஆதிதிராவிடர் நலக்குழு பாண்டியன், மாயவன் உள்ளிட்ட திமுக விசிக காங்கிரஸ். உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

