அவரின் பெருமைகள் குறித்து பாடல் எழுதியவர் முனிராஜ், பைஜூ ஜாக்கப் இசை அமைத்துள்ளார் பின்னனி பாடகர் முகேஷ், இப்பாடலை பாடியுள்ளார், சக்ரா மியூசிக்கில் வெளியானது. மனிதம் ஆல்பம் பாடல் மற்றும் இசை ஆல்பத்தினை சென்னை தேமுதிக கட்சி அலுவலக்தில் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகரன் கரங்களால் வெளியிட, இசை ஆல்பத்தினை திரைப்பட இயக்குநர் முனிராஜ் அதனை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தேமுதிக மாநில, மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இயக்குநர் முனிராஜ் கூறுகையில் தியாகத்தின் உருவமாக , திரைத்துறையினருக்கு வழிகாட்டியாக நடமாடும் தெய்வமாக வாழ்ந்து மறைந்த புரட்சி கலைஞர் நடிகர் விஜயகாந்த் அவர்களின் பெருமைகள் குறித்து இசை ஆல்பம் வெளியிட வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு மனிதம் இசை ஆல்பம் வெளியீட்டின் மூலம் இன்று நிறைவேறி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

