இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிந்த பெற்றோர்களையும், முன்னாள் மாணவர்களையும், ஆசிரியர்கள் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் சபரிநாதன் முன்னிலை வகித்தார், இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி தலைமை வகித்தார். இப்பள்ளியில் இரண்டு கட்டமாக ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு என இரண்டு கட்டமாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்காக செயல்படக்கூடிய புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய தலைவராக விஜியா துணைத்தலைவராக செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள், முன்னாள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

