தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பேருந்து நிலையம் முன்பு நடிகரும், தேமுதிக நிறுவனருமான புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, மாவட்ட பொருளாளர் ராமசந்திரன், மாவட்ட அவைத் தலைவர் உதயகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன், நகர செயாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கட்சி கொடி ஏற்றி, விஜயகாந்த் அவர்களின் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கேப்டன் மன்ற மாவட்டதுணை செயலாளர் குமரவேல், மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

