பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் தேமுதிக நிர்வாகிகள் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டம் மூலம் 500 நபர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
பிறர் பசியுடன் இருக்க கூடாது என்று தன்னை காண வருவோர் அனைவருக்கும் உணவு வழங்கிய கலியுக வள்ளல் கேப்டன் அவர்களின் பிறந்தநாளில் தருமபுரி அரசு மருத்துவமனை நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் இளங்கோவன், செயலாளர் பாளையம்புதூர் குமார், இணை செயலாளர் ஜெயம் சுரேஷ் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு உணவு வழங்கினர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக தமிழ்செல்வன், அருணாசலம், அருள்மணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

