தர்மபுரிமாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி, எம்.ஜி.ஆர் நகரில் நடிகரும், தேமுதிக நிறுவனருமான புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா விஜய்காந்த் ரசிகர்களின் சார்பில் சக்திவேல் தலைமையில் கொண்டாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஜெயகிருஷ்ணன், முனியப்பன், சிவாஜி, வெங்கடேஷ், பழனி, வேல்முருகன், வஜ்ரவேல், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து கட்சிகொடி ஏற்றி,விஜயகாந்த் அவர்களின் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புக்களும், அன்னதானமும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் , தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

