பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சேலம் கோட்டம் சார்பில், ”நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டம் 2023 2024-ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு மண்டல அளவில் இரண்டாம் இடம் பெற்ற தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோழிமேக்கனூர் திட்ட பகுதி குடியிருப்போர் நல சங்கத்திற்கு வரப்பெற்ற பரிசுத்தொகை ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 14 முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களின் சிறார்களுக்கு ரூபாய் 2 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் கல்வி நிதியுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் திரு.பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணியம், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) திருமதி.சௌந்தர்யா, செல்வி.கார்த்திகா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் திரு.சிலம்பரசன், திரு.முருகதாசன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (பொ) திருமதி.பிரேமா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

.jpg)