Type Here to Get Search Results !

உங்க வீட்ல மாடு இருக்கா? அப்போ உங்களுக்கு தான் இது.


பசு மாடுகளுக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் தோல்கழலை நோயினை கட்டுப்படுத்தும் விதமாக தருமபுரி மாவட்டத்தில் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் 2024 ஆகஸ்டு 30-ஆம் தேதி வரை 2,00,000 கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது.  


மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டிமாடுகள் மற்றும் நான்குமாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்நோயானது குறிப்பாக பசுக்களையே தாக்குகிறது. நோய்த்தாக்கம் ஏற்பட்ட பசுக்கள் அதிக காய்ச்சல், இரை உண்ணாது இருத்தல், தண்ணீர் குறைவாக அருந்துதல் போன்ற அறிகுறிகளோடு மிகவும் சோர்வாக காணப்படும்.  


நோய் கண்ட பசுக்களின் தோலின் மேல் சிறுகொப்பளங்கள் போல் வட்ட வடிவில் தடிப்புகளோ, புண்களோ ஏற்படும்.  மேலும் இந்நோய் கால்நடைகளைத் தாக்காவண்ணம் கால்நடை வளர்ப்போர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி பூஸ்டர் தடுப்பூசி போட்டு தங்களது கால்நடைகளை பாதுகாத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies