நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவர் இந்துமதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை வீரர்களின் தியாகங்களை குறித்தும், தேசபற்று குறித்தும் பேசினர்.
தொடர்ந்து பேரூராட்சி அலுவலம் முன்புள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, பேரூராட்சி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டுபுத்தகம், மற்றும் கல்வி உபகரணங்கைளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் குமார், மோகன், ஜெயந்திமோகன், சரவணன், பத்தேகான், ரூஹித், வகாப் , பள்ளி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

