தருமபுரி மாவட்டமின்றி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பானதோர் சேவையை மை தருமபுரி அமைப்பினர் செய்து வருகின்றனர். மை தருமபுரி அமைப்பின் மூலம் தினம்தோறும் ஏழை மக்களுக்கு உணவு சேவை, ஆதரவின்றி இறந்த புனித உடல்கள் நல்லடக்கம், அவசர ரத்த தானம், இயற்கை சீற்றங்களின் நிவாரண உதவி போன்ற மனிதநேயமிக்க சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பான முறையில் குழுவாக ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்றிமைக்காண விருதை மை தருமபுரி அமைப்பினருக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி.,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பாராட்டை தெரிவித்தார், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர்.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த விருதினை மை தருமபுரி அமைப்பின் கௌரவ தலைவர் சிகேஎம் ரமேஷ், நிறுவனர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மருத்துவர் முஹம்மத் ஜாபர், சண்முகம், சபரி முத்து ஆகியோர் குழுவாக இணைந்து விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

