தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தைச் சார்ந்த க ஈச்சம்பாடி காலனி தொடக்கப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ) சீர் விஜயன் தலைமையேற்று நடத்தினார் விழாவில் வார்டு உறுப்பினர் தமிழரசு அப்துல் கலாம் பசுமை இயக்க தலைவர் சின்னமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுதந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சீர் விஜயன் பல்வேறு விதமான பரிசுகளை வழங்கினார் இவ்விழாவில் பள்ளியின் தற்காலிக ஆசிரியர் வ கயல்விழி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் மேலும் ஊர் பொது மக்களும் இளைஞர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் காலை உணவு திட்ட பணியாளர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இறுதியாக அப்துல் கலாம் பசுமைக்கு அறக்கட்டளை சார்பாக பள்ளிக்கு நிழல் தரும் மரங்கள் பழங்கள் தரும் மரங்கள் ஆகியவற்றை பள்ளி வளாகத்தில் நடவு செய்யப்பட்டது.

