தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் 78 வது சுதந்திர தின விழா கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் அவர்கள் தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பேராசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் CLP பணியாளர்கள் அலுவலகப் பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். NCC NSS மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. NCC NSS விளையாட்டுத்துறையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன் அவர்கள் தொகுத்து வழங்கி ஒருங்கிணைத்தார்.

