Type Here to Get Search Results !

அதியமான்கோட்டை அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோயில் அருகில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோயில் அருகில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோயில் அருகில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் (15.08.2024) அன்று ஆய்வு மேற்கொண்டார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை 2023-2024க்கான மானியக் கோரிக்கையின்போது, தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.1.79 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.


தருமபுரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருக்கோயில்களுள் ஒன்றான அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதியமான்கோட்டை கிராமத்தில் 0.28 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 8 ஆண்டுகள் ஆகின்றன. இத்திருக்கோயிலுக்கு 7 உபகோயில்களும், 3 குழுக்கோயில்களும் உள்ளன. மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வெண்பூசணி தீபங்கள் ஏற்றி வழிபடுவதும், இரவு 10 மணிக்கு மேல் சத்ருசம்ஹார யாகமும், குருதி பூஜையும் நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.


அருள்மிகு காலபைரவர்சுவாமி திருக்கோயிலுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் பக்தர்களின் கோரிக்கையினை ஏற்றும், திருக்கோயிலின் வளர்ச்சியை கருதியும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.


மேலும், காலபைரவர்சுவாமி திருக்கோயிலில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டடம், குளியலறை, கழிவறை உள்ளிட்ட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, நல்லம்பள்ளி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.ச.மாது, தருமபுரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.பெ.கௌதமன், வட்டாட்சியர்கள் திரு.சிவகுமார், திரு.சண்முகசுந்தரம், செயல் அலுவலர் ஆ.ஜீவானந்தம், ஒப்பந்ததாரர் திரு.துரைசாமி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies