Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டமளிப்புப்பு விழா.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டியில் உள்ள  ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது,

ஸ்ரீ மூகாம்பிகை, ஸ்ரீ வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர்  கோவிந்தராஜீ தலைமை வகித்து இவ்விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார், கல்லூரி முதல்வர் ரகுநாதன் ஆண்டறிக்கை வாசித்தார், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.


இவ்விழாவில் 285 இளங்கலை மாணவிகளுக்கும் , 48 முதுகலை மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் கே.ஜி.எம் மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் பாலகிருஷ்ணன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.வி.ரங்கநாதன், வழக்கறிஞர் சந்திரசேகர், ரங்கா டிபார்ட்மென்ட் உரிமையாளர் துரைராஜ், ஓசூர் ஹெச்டிஎஃப்சி வங்கி முதுநிலை மேலாளர் குமார், மகேந்திரமங்கலம் ஊராட்சி தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


விழாவில் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் முருகேசன் நன்றி தெரிவித்தார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ப்ரித்விராஜ், உள்ளிட்ட கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies