தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக காரிமங்கலம் அடுத்த பொட்டியங்காடு கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி முருகம்மாள் (வயது 62) மற்றும் கே.எம்.புதுர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி முனியப்பன் (வயது.47) ஆகியோரது ஓட்டு வீடுகள் ஆகஸ்ட் 23ம் தேதி இன்று விடியற்காலை இடிந்து விழுந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை, இருப்பினும் மளிகை சாமன்கள், தட்டுமுட்டு சாமான்கள் துனிமனிகள் சேதமாகின, தகவலறிந்த காரிமங்கலம் தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் வருவாய் துறையினர் முருகம்மாள் மற்றும் முனியப்பன் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி அரிசி, பருப்பு, மண்ணென்னெய் உள்ளிட்ட நிவாரன பொருட்களை வழங்கினர்.
மேலும் சேதம் குறித்து ஆய்வு செய்தவர்கள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் புதிய வீடு கட்ட பரிந்துரைப்பதாக தெரிவித்தனர்.

