Type Here to Get Search Results !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூபாய் 4 இலட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூபாய் 4 இலட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று வழங்கினார்.

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள்   தலைமையில் இன்று (12.08.2024) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 610 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூபாய் 3 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 9 முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களுக்கு ரூபாய் 74 ஆயிரம் மதிப்பீட்டில் கண்கண்ணாடி நிதியுதவி, ஈமசடங்கு நிதியுதவி மற்றும் தட்டச்சு பயிற்சி நிதியுதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெற்றோரை இழந்து பாட்டியுடன் வசித்து வரும் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள செல்வி பிரதிக்ஷா என்பவரின் தொடர் சிகிச்சை பரிசோதனைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் தபால் நிலைய KVP பத்திரம் (Kisan Vikas patra) மூலம் டெபாசிட் செய்யப்பட்டு, வங்கி கணக்கு புத்தகத்தை மாணவியின் பாட்டியிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.செம்மலை, முன்னாள் படைவீரர் நலத்துறை அலுவலர் (பொ) திருமதி.பிரேமா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies