ஆய்வில் மொரப்பூர் பேருந்து நிலைய பகுதி அருகில் சிந்தல்பாடி சாலையில் ஒரு பீடா ஸ்டாலுடன் இணைந்த பழங்கள் விற்பனை செய்யும் கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப், விமல் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சுமார் 2 கிலோ அளவிலானது கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. நியமன அலுவலர் அவர்களால் மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளருக்கு உடனடி அபராதம் ரூபாய்.25000 விதித்து மேற்படி கடை இயங்க தடை விதித்து கடையை மூடச் செய்தனர்.
உடன் அபராதம் செலுத்திடவும் 15 தினங்கள் வரை கடை திறக்கக் கூடாது என எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர். மேலும் மொரப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி விற்பனை செய்வதாக வந்த தகவல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வீட்டின் உரிமையாளரும் கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகில் பெட்டி கடை நடத்தும் நபர் மீது ரூபாய் 25000 உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆய்வின் போது ஒரு குளிர்பான கடையில் காலாவதியான குளிர்பான டெட்ரா பாக்கட்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. சுகாதாரம் குறைவாகவும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் காட்சிப்படுத்தப்பட்ட எண்ணெய் பலகாரங்கள் ஒர் உணவகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இது சார்ந்து இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் தலா ரூபாய்.1000 உடனடி அபராதம் விதித்து குறைகள் களைய எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது .
உணவு சார்ந்த தொழில் செய்யும் அனைவரும் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வலியுறுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதோ பதுக்குவதோ சட்டப்படி குற்றம் எனவும் புகார் செய்ய 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்க விழிப்புணர்வு செய்யப்பட்டது.


