தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி சமுதாயகூடத்தில் பஞ்சப்பள்ளி, கும்மனூர் சூடனூர், அத்திமுட்லு, கெண்டேன அள்ளி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் தலைமையில் நடைப்பெற்றது.
இம்முகாமில் எக்காண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் தமிழக உழவர் முன்னனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசு தலைமையில் தென்பென்னை ஆற்றிலிருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் வேண்டி மனு அளித்தனர்.
அதில் தென்பென்னை ஆற்றின் உபரி நீரை கிருஷ்ணகிரி மாவட்டம், அலியாளம் அனைக்கட்டிலிருந்து வலது புற நீர் வழங்கும் கால்வாய் வழியாக தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள தூள் செட்டி ஏரிக்கு நீர் கொண்டு வந்து அதன் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர் கொண்டு செல்வதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படைந்து விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனவே இத்திட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

