Type Here to Get Search Results !

அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விடுதலைக்கான கருத்தரங்கம் நடைபெற்றது


தருமபுரி மாவட்டம் அரூர் அண்ணல் அம்பேத்கார் அறிவகம் அறக்கட்டளையும், மக்கள் மறுமலர்ச்சி தடம் (MMT) இணைந்து நடத்திய நாம் யார்? என்கிற தலைப்பில் உரைவாள் எ.கொ.அம்பேத்கார் ஆசிரியர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பான பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது. அதை தொடர்ந்து வாழ்த்துரையாக அறக்கட்டளையின் தலைவர் ப. மாதையன் அவர்கள் சிறப்பாக வழங்கினார். 


மேலும் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி ரூபிகா, வாணிஸ்வரன் மா. அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கி பாராட்டப்பட்டது. அடுத்து முன்னாள் சிறுபான்மை ஆணைய உறுப்பினர் நிறுவனத்தலைவர் MMT மக்கள் மறுமலர்ச்சி தடம், புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவர் டாக்டர். ராஜவர்த்தனன் அவர்களின் மூன்று மணிநேரம் மறைக்கப்பட்ட வரலாறு குறித்த செய்தி தொகுப்பு வழங்கினார். 


நிகழ்வின் வரவேற்புரையை சேலம்  கண் மருத்துவர் டாக்டர். சசி அவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர் இந்திய குடியரசு கட்சி வி.எஸ் குமரேசன் அவர்கள் வழங்கினார்கள்


இதில் திமுக ஆதிதிராவிட மாநில நலக்குழு துணை செயலாளர் திராவிட செம்மல் சா.இராசேந்திரன் மு.சிவராமன் புள்ளியல் துறை உதவி இயக்குநர் சேகர் DEO ஓய்வு தலைமையாசிரியர்கள், மகேந்திரன் கந்தசாமி காளியப்பன் சேகர் கமலசேகர் ஆசிரியர்கள், ராமசந்திரன் சின்னையன் சக்திவேல் கவிஞர்கள் ஆதிமுதல்வன் சுரேஷ் ஆதி செளந்தர்ராஜன் சிங்கரவேலு குபேந்திரன் வசந்த் அ.உ.பேரவை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் விஜயன் செந்தில் சிவாலிங்கம் உடற்கல்வி ஆசிரியர் வேடியப்பன் வி. சி .க கேசவன் மருதை.ராஜராம் காவரி சோலை ஆனந்தன் சமூக சேவகர் சா.புத்தமணி இந்திய குடியரசு கட்சி வெங்கடேசன் மருத்துவர்கள் நெடுமாறன் சங்கர் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies