தர்மபுரி மாவட்ட சன் டிவி செய்தியாளர் திரு அ குமரவேல் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கே சாந்தி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் தர்மபுரி மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள பத்திரிக்கையாளர் அறையில் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் மற்றும் தர்மபுரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

