பென்னாகரம் அருகே உள்ள பருவதன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குறுந்தொப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். விவசாயியான இவரது பசு மாடு, இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் விழுந்து விட்டது. இதுகுறித்து பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலை தொடர்ந்து சிறப்பு நிலைய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் வினோத் குமார், ராஜ்குமார், கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் சுமார் 2 மணி நேரம் போராடி ஜேசிபி உதவியுடன், கயிறு கட்டி, பசுமாட்டினை உயிருடன் மீட்டனர். இதற்காக விவசாயி கார்த்திக் மற்றும் அக்கிராம பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

.jpg)