தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு இந்து அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னனி சார்பில் மாவட்ட செயலாளர் வேடியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன்,சிவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலயங்களில் உள்ள தரிசன கட்டணங்களை ரத்து செய், இந்து அறநிலையத் துறையே ஆலயங்களை விட்டு உடனே வெளியேறு, பக்தர்களின் காணிக்கையை கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பாலக்கோடு போலீசார் கைது செய்து மீண்டும் மாலை 5 மணிக்கு விடுவித்தனர்.

