மை தருமபுரி அமரர் சேவை மூலம் 101வது ஆதரவற்றவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது, இது குறித்து மை தருமபுரி தன்னார்வலர் அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் கூறுகையில்:- சேலம் ரயில்வே உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மொரப்பூர் புட்டிரெட்டிப்பட்டி இடையிலான பகுதியில் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் 35 மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்தார். இவரைப் பற்றி விசாரித்ததில் எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து சேலம் கோட்டம் இருப்புப் பாதை காவலர் அருண்குமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், செந்தில்குமார், முஹம்மத் ஜாஃபர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 101 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம், என அவர் தெரிவித்தார்.

