தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி கல்லூரி மாணவர்களின் உயிருடன் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது, பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அச்சத்திலேயே சாலையை கடக்கும் சூழல் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் வேகத்தடை உடனடியாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

