தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார், சிறுமியின் பெற்றோர்கள் கரும்பு வெட்டு கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுடன் வேலை செய்யும் பொன்னேரி குட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது.40). என்பவர் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்க்கு சென்று சிறுமியிடம் நைசாக பேசி, அவரது வீட்டிற்க்கு அருகே உள்ள கரும்பு தோட்டத்திற்க்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து 3 முறை இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் சிறுமி தனது பெற்றோரிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் பாலக்கோடு அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

