Type Here to Get Search Results !

நில மோசடிக்கு உடந்தையாக இருந்த வட்டாச்சியர், கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தரவேண்டும்; குடும்பத்துடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேவுள்ள பெலமாரனஅள்ளி காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான 1. சிவமணி(60) மற்றும் 2. மாதயைன்(65)  ஆகியோர் தங்களது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளனர், அந்த மனுவில் தங்களுக்கு பூர்வீகமாக பாத்தியபட்ட பனிரெண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் வீடுகள் கட்டியும், கிணறு வெட்டியும் விவசாயம் செய்து  குடியிருந்து வருவதாகவும், இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சீதாராமன் என்பவர் தங்களுடைய நிலத்தினை அரசு அதிகாரிகளின் ஆசியுடன் நிலத்திற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து,  மாரவாடி கிராமத்தை சேர்ந்த ராமன்(66), இண்டூரை சேர்ந்த கிளிவண்ணன்(50) பெரியகுரும்பட்டி கிராமத்தை மாயக்கண்ணன் ஆகியோருக்கு 2023 ம் ஆண்டு விற்பனை செய்திருக்கிறார்.


இந்த விபரம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து சம்மந்தபட்ட நபர்களிடம் கேட்ட போது, மொத்த  குடும்பத்தையே கொலை செய்து விடுவோம், யாரிடம் வேண்டுமானாலும் புகார் மனு கொடுத்துக்கொள்ளுங்கள் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர், எனவே தங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீதும், பணத்திற்காக போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த பாலக்கோடு வட்டாச்சியர் மற்றும்  பெலமாரணஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் நிலத்ததை மீட்டு தர வேண்டுமெனவும், நடவடிக்கை எடுக்காவிட்டால்  குடும்பத்துடன் தற்கொலை செய்து உயிரை மாய்த்து  கொள்வதை தவிர வேறு வழியில்லை என சிவமணி மற்றும் மாதையன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884