தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடமடை இரயில்வேகேட் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில் சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில், மூங்கப்பட்டியை சேர்ந்த முனியப்பன் (வயது48), கம்மாளப்பட்டியை சேர்ந்த தாமோதிரன் (வயது.35), கடமடையை சேர்ந்த சுரேஷ் (வயது35), மூங்கப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது.45), எனவும் இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள் என தெரிய வந்தது. 4பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுக்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.