தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின் கட்டண உயர்வு சொத்து வரி பல மடங்கு உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு,விண்ணை முட்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, நிலங்களுக்கான வழககாட்டி மதிப்பு பல மடங்கு உயர்வு, முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு, மறைமுக பேருந்து கட்டணம் உயர்வு, சாலை வரி உயர்வு, என எண்ணற்ற வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்தி ஏழை எளிய மக்கள் மீது சுமைகளை ஏற்றும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர். முத்துசாமி தலைமை வகித்தார், நகர செயலாளர். பார்த்திபன் வரவேற்புரை ஆற்றினார்.
தலைமை நிலைய செயலாளரும் மாவட்ட செயலாளருமான டி கே ராஜேந்திரன் கண்டன பேருரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில மாவட்ட நகர பேரூர் கிளை நிர்வாகிகள் அமமுக உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர். போலீஸ் கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.

