தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு இந்து அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னனி மாவட்ட செயலாளர் வேடியப்பன் தலைமையில், ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய், ஆலயங்களை விட்டு இந்து அறநிலையத் துறை உடனே வெளியேறு, பக்தர்களின் காணிக்கையை கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், அதனை மீறி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்க்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னனியை சேர்ந்த நிர்வாகிகள் வேடியப்பன் (வயது .30), முனியப்பன் (வயது.28), மணிகண்டன் (வயது.32), சிவா (வயது .27), ரவி (வயது .55) பெரியசாமி (வயது.36), விஸ்வநாதன் (வயது.25), ஜெகதீசன் (வயது. 23) பிரபாகரன் (வயது 33) சக்தி (வயது. 20) கணேசன் (வயது .27) ஸ்ரீராம் (வயது .28) சண்முகம் (வயது .34) சிவராஜ் (வயது .40) சரவணன் (வயது .32) உள்ளிட்ட 15 பேர் மீது பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

