பென்னாகரம் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் இறுதி கட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு இறுதிப்பணியில் உள்ள பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.அந்த ஆய்வின்போது பேருந்து நிலைய வளாகத்தில் ரூபாய் 55 லட்சம் மதிபீட்டில் சாலை போட வேண்டிய பணி இன்னும் முடியுராதது குறித்தும் பேரு நிலையம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டிலான சிறுவர் பூங்கா பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் என்றும் மேலும் இந்த பூங்காவில் காலை மாலை நடை பயிற்சிக்கு பயன்படுத்திடுமாறும் அதிகாரிகளிடம் கூறினார் மற்றும் உயர்ந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி (பொறுப்பு) பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், இளநிலை பொறியாளர் பழனி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

