இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். வட்டக் குழு நிர்வாகிகள் காரல் மார்க்ஸ், நக்கீரன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்ட உரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராய சாவிற்க்கு காரணமான அனைத்து அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழித்திட சிறப்பு சட்டம் இயற்றி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆறுமுகம் நன்றி உரை ஆற்றினார்.

