Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி மாயம்!


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம் ஊராட்சி சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் விவசாயி. இவரது 17 வயது மகள் காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்து விட்டார். தர்மபுரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பயிற்சி நிலையத்திற்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. 

அவர் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies