Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பேருந்தில் மூதாட்டியிடம் தங்க நகை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்ற 2 பெண்கள் கைது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே செக்கோடி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி காவேரியம்மாள் (வயது. 60), இவர் நேற்று மாலை தனது பேத்தியுடன் வெள்ளி சந்தை அருகில் உள்ள மகேந்திர மங்கலத்தில் உள்ள உறவிணர் வீட்டிற்க்கு செல்வதற்காக செக்கோடியில் இருந்து அரசு பேருந்தில் ஏறி மகேந்திரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.


அப்போது இவருக்கு அருகில் இருந்த  2 பெண்கள் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து கொண்டு வந்தனர். பாலக்கோடு அருகே சோமனஅள்ளி பஸ் நிறுத்தத்தில் பேருந்து நின்ற சமயம் பார்த்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கி தப்பி செல்ல முயன்றனர். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பேருந்தை நிறுத்தப்பட்டது. உடனடியாக சக பயணிகள் 2 பெண்களையும் தப்பி செல்லாதவறு பிடித்து கொண்டனர்.


இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் 2 பெண்களையும், பாலக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில் வேலூர் மாவட்டம், குடியாத்தம், பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஜோதி (வயது.40) அவருடைய தங்கை மாதவி (வயது. 36) என்பதும் தெரிய வந்தது.


இதையடுத்து அவர்களிடமிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies