Type Here to Get Search Results !

தருமபுரி நகர அரசு பேருந்துகள் முறையாக சரியான நேரத்தில் இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதி.


இன்று 18-06-2024 மாலை 4-45 மணி முதல் மாலை 6-15 மணி வரை பாப்பாரப்பட்டி செல்ல வேண்டிய நகரப் பேருந்துகள் எண்: 23, 32 உள்ளிட்ட பேருந்துகள் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் வரவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் கால் கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


இயக்க வேண்டிய அரசு நகரப் பேருந்துகளை முறையாக சரியான நேரத்தில் இயக்காததால் அரசில் விலையில்லா பேருந்துப் பயணத்தைப் பயன்படுத்த முடியாமல் ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies