Type Here to Get Search Results !

மேக்கலாம்பட்டி சாலை அருகே நடந்து சென்ற முதியவர் மீது சொகுசு கார் மோதியதில் முதியவர் பலத்த காயம்.போலீசார் விசாரனை.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தை சேர்ந்த முதியவர் பச்சியப்பன் (வயது .75) இவர் நேற்று முன்தினம் 16ம் தேதி காலை 11 மணிக்கு வீட்டிற்க்கு செல்வதற்காக பாலக்கோட்டிலிருந்து கடமடை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.


மேக்கலாம்பட்டி சாலை அருகே  சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த சொகுசு கார் முதியவர் மீது மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இது குறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies