Type Here to Get Search Results !

நெல்லை சிபிஎம் அலுவலகத்தை தாக்கிய சாதிவெறிகும்பலை கண்டித்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்.


தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறி கும்பலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதன்குமார் என்பவரும் உதயதாட்சாணி என்பவர் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர் இவர்கள் பதிவு துறை அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்வதற்காக சென்றபோது பந்தல் ராஜா என்ற கும்பல் பதிவு செய்ய கூடாது என தடுத்து வந்தனர். 


இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர் இதனை அறிந்த சமூக விரோதிகள் அலுவலகத்திற்கு புகுந்து ஊழியர்கள் மீதும் அலுவலகத்தில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இச்செயலை கண்டித்தும் காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறி கும்பல் மீட்பு  சட்டரீதியான  நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.


மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.நாகராசன் சோ.அருச்சுணன் எஸ்.கிரைஸாமேரி வே.விசுவநாதன், ஆர்.மல்லிகா, ஆர்.சின்னசாமி  தி.வ.தனுசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை மு.கலைவாணன் ஆகியோர் பேசினர, நகரசெயலாளர் சி.முரளி நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies