Type Here to Get Search Results !

அரூர் பள்ளி மாணவர்கள் மாநில ஒலிம்பியட் யோகா போட்டிக்கு தேர்வு.


தருமபுரி மாவட்டம்அரூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான யோகா ஒலிம்பியட் போட்டிக்கு தேர்வு பெற்றனர் தர்மபுரி மாவட்ட அளவிலான யோகா போட்டி அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கலந்து கொண்டனர் மாணவ மாணவியர்கள் இரு பிரிவாக நடைபெற்றது.


இதில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர், மாணவர்கள் நாளை நடைபெறும் மாநில அளவிலான யோகா ஒலிம்பியட் போட்டியில் மதுரையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் சுமன் எட்டாம் வகுப்பு, மாணவன் சித்திஸ் எட்டாம் வகுப்பு மாணவன் /சாம்ராட் அசோகா ஒன்பதாவது மாணவன் ஆகிய மூன்று மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தகுதி பெற்று சாதனை படைத்த மாணவர்களையும் பயிற்சி அளித்த  பழனி துரை நல்லாசிரியர் சங்கர், முருகேசன், வெங்கடாசலம்  உடற்கல்வித்துறை ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஆறுமுகம் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் கலைவாணன் பள்ளி ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies