Type Here to Get Search Results !

ஓசூர் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார், திமுக மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன்.


தருமபுரி மேற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக் குழு சார்பில் ஓசூர் பட்டாசு விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார், திமுக மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அரூர் கிழக்கு ஒன்றியம் தா.அம்மாபேட்டையை சார்ந்த 8 நபர்கள் கடந்த ஆண்டு ஓசூர் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தார், அவர்களின் குடும்பத்தார்க்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி தா.அம்மாபேட்டையில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திமுக அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.சந்திரமோகன் தலைமை வகித்தார். தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு ஓசூர் பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கும் நிதிஉதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார் இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலை வகித்தார்.


இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா, திமுக மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே.திருமால், அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.வேடம்மாள், மாவட்ட துணை செயலாளர் சி.கிருஷ்ணகுமார், மாவட்ட அமைப்பாளர்கள் ஐடிவிங் கு.தமிழழகன், சி.தேசிங்குராஜன், சி.தென்னரசு, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள்  கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies