Type Here to Get Search Results !

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள இறுதி முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ன் வாக்கு எண்ணும் பணிகள் ஜூன் - 04 அன்று செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள இறுதி கட்ட முன்னேற்பாடு பணிகளை தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள்,  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., ஆகியோர் இன்று (03.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர்கள் திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள், திரு.ஸ்ரீஹர்சா எஸ் செட்டி அவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி சுழற்சி முறையில்  (Randomization) நடைபெற்றது.


தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நாளை (ஜூன் - 04) நடைபெறும் செட்டிகரை வாக்கு எண்ணும் மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு தனித்தனியே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும், CCTV கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் அறை, வாக்கு என்னும் அறையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியாக 14 மேசைகள் அமைக்கபட்டுள்ளதையும், ஒவ்வொரு மேசைகளுக்கும் தனித்தனியாக CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், தபால் வாக்கு எண்ணும் அறையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளையும், வாக்கு எண்ணும் மையங்களில் மின்சார வசதி, மின்விளக்குகள், மின்விசிறி, குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், 


பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மீடியா சென்டர் (media centre) அமைந்துள்ள அறையினையும், ஒவ்வொரு சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை விவரத்தை அறிவிக்க ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளதையும், வேட்பாளர் மற்றும்  அவரது முதன்மை முகவரிடம் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது தொடர்பு அறையில் (Public Communication Room) அமர்வதற்கான அறை, தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்கள்,  தீயணைப்பு வாகனம் மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழு அமரும் அறை ஆகிய முன்னேற்பாடு பணிகளை தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர்கள் திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும், இறுதிகட்டப்பணிகளை விரைவாக முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். 


இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள்,  பொதுப்பணித்துறை அலுவலர்கள், மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies