Type Here to Get Search Results !

வாக்கு எண்ணிக்கையை பார்வையிட தேர்தல் பார்வையாளர் வருகை


தருமபுரி பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக 57-பாலக்கோடு, 58-பென்னாகரம், 59-தருமபுரி, ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு திருமதி.அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்களும் மற்றும் 60-பாப்பிரெட்டிப்பட்டி, 61-அரூர் (தனி), 85-மேட்டூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு திரு. ஸ்ரீஹர்ஷா எஸ் செட்டி அவர்களும் மத்திய பார்வையாளர்களாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிடப்பட்ட வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.


மேலும், 10. தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக வாக்கு எண்ணும் பார்வையாளர் திருமதி. அருணா ரஜோரியா, இ.ஆ.ப., அவர்களை 9363962216 என்ற கைபேசி எண்ணிலும் (அல்லது மின்னஞ்சல் முகவரி generalobs2024.dpi@gmail.com) மற்றும் திரு. ஸ்ரீஹர்ஷா எஸ் செட்டி அவர்களை 9363791501 என்ற கைபேசி எண்ணிலும் (அல்லது மின்னஞ்சல் முகவரி generalobs2024.dpi@gmail.com) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies