Type Here to Get Search Results !

உலக யோகா தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் யோகா தின விழா கொண்டாட்டம்.


உலக யோகா தினத்தை முன்னிட்டு அறிவித்திருக்கோவில் சத்திரம் மேல் தெரு சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, இதில் அரசு பள்ளி மற்றும் ஐடிஐ தர்மபுரி அவ்வையார் மேல்நிலைப்பள்ளி, குமாரசாமி பேட்டை செங்குந்தர் பள்ளி, கடகத்தூர் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி, கன்னிப்பட்டி மேல்நிலைப்பள்ளி, பேகாரா அள்ளி அரசு தொடக்கப்பள்ளி, பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்ட் பள்ளி, ஆகிய இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் மகளிர்களுக்கும்   யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இண்டூர் ராஜா, தோப்பு பெரியாம்பட்டி, மருத்துவர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொழில் பயிற்சி நிலைய பிரின்ஸ்பல் சிவகுமார்,  உடற்பயிற்சி ஆசிரியர் முனியப்பன், மற்றும் ஸ்கைப்ரோபசர்ஸ் சுப்பிரமணியன், இளங்கோ, வெங்கடேசன், பிரசாந்த் ,நாகலட்சுமி, வெற்றி தொண்டு நிறுவனர்  கங்கா, சசிகலா, செல்வி, கோகிலா, காலா, திரவுபதி,காயத்ரி, மேகலா, வனிதா, மாதேசன்,சங்கீதா, உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies