Type Here to Get Search Results !

திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை கூட்டரங்கத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்     திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.06.2024) நடைபெற்றது. இம்முகாமில் திருநங்கைகளுக்களுக்கான நல வாரிய அட்டைகள் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்     அவர்கள் வழங்கினார்.


இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட சமூகநலத்துறை, வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட ஊராட்சி முகமை, கால்நடை பராமரிப்பு துறை, திறன்மேம்பாட்டுதுறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், எல்காட் ஆதார் அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கான சீட்ஸ் தொண்டு நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த கருத்துகளை தெரிவித்தனர். இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.


இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் திருநங்கைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.   இம்முகாமில் திருநங்கைகளுக்கான நலவாரிய அட்டை, ஆதார் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஸ்மான் அட்டை ஆகிய விண்ணப்பிக்க   இணையவழி சேவைகள் வழங்கப்பட்டன.  


இம்முகாமில் திருநங்கைகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள்  உரிய நடவடிக்கை  மேற்கொள்ளவும்,   திருநங்கைகளின்  குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுத்தியுள்ளார். 


திருநங்கைகள் அனைவரும் அரசின் திட்டங்களான திறன் பயிற்சி, தையற்பயிற்சி, கால்நடைவளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி பெற்று, சுயமாக தொழில் தொடங்கி வருவாய் ஈட்டும் வகையில் அரசால் வழங்கப்படும்  கடன்உதவிகளை பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, பொருளாதாரத்தில் தன்னிறைவுடன் சமூகத்தில் நல்ல நிலையில்  கண்ணியமாக வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். 


மேலும், அரூர் பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள பங்குதொகை செலுத்தி விண்ணப்பத்தால், முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். 

 

இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாகலிங்கம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies