Type Here to Get Search Results !

தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்கழகம்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ கடன்‌ திட்டம்‌ முக்கிய அறிவிப்பு.


தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ பொருளாதார மேம்பாட்டுக்கழகம்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ கடன்‌ திட்டம்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப, அவர்கள்‌ தகவல்‌ தமிழ்நாடு    சிறுபான்மையினர்‌  பொருளாதார மேம்பாட்டுக்கழகம்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ கடன்திட்டங்களான தனிநபர்கடன்‌, சுய உதவிகுழுக்களுக்கான சிறு தொழில்‌ கடன்‌, கைவினை கலைஞர்களுக்கு கடன்‌, கல்விகடன்‌ ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்படுகிறது.

திட்டம்‌ 1-ன்‌ கீழ்‌ பயண்பெற குடும்ப ஆண்டு வருமானம்‌ நகரப்புறமாயின்‌ ரூ.4,20,000/-க்கு மிகாமலும்‌, கிராமப்புறமாயின்‌ ரூ.98,000/- க்கு மிகாமலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. திட்டம்‌ -2ன்‌ கீழ்‌ பயண்பெற குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.8,00,000/-க்கு மிகாமலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


திட்டம்‌-1ன்‌ கீழ்‌ தனிநபர்கடன்‌ ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும்‌, அதிக பட்ச கடனாக ரூ.20,00,000/- மும்‌, திட்டம்‌ -2ன்‌ கீழ்‌ ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும்‌ அதிக பட்ச கடனாக ரூ.30,00.000/- கடன்‌ வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில்‌ அதிகபட்ச கடனாக ரூ.0,00.000/- கடன்‌ வழங்கப்படுகிறது. சுயஉதவிக்‌ குழு கடன்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ.400000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில்‌ கடன்‌ வழங்கப்படுகிறது திட்டம்‌ -2ன்‌ கீழ்‌ ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ4,50,000/- கடன்‌ வழங்கப்படுகிறது. 


மேலும்‌ சிறுபான்மையின மாணவ மாணவிகள்‌ அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்‌ இளங்கலை 7/ முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம்‌ 1-ன்‌ கீழ்‌ ரூ.20,00,000/- வரையில்‌ 3% வட்டி விகிதத்திலும்‌, திட்டம்‌-2ன்‌ கீழ்‌ மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும்‌ ரூ.30,00,000/- வரையிலும்‌ கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.


எனவே இம்மாவட்டத்தில்‌ வசிக்கும்‌ கிறித்துவ இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ ஆகிய சிறுபான்மையினர்கள்‌ கடன்‌: விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தில்‌ பெற்று அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன்‌ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. கடன்‌ மனுக்களுடன்‌ சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார்‌ அட்டை, வருமானச்சான்று, உணவுபங்கீடு அட்டை, அல்லது இருப்பிடச்‌ சான்று, கடன்‌ பெறும்‌.


தொழில்‌ குறித்த விவரம்‌, திட்ட அறிக்கை, ஓட்டுநர்‌ ஒரிமம்‌ (போக்குவரத்து வாகனங்கள்‌ கடன்‌ பெறுவதற்காக இருந்தால்‌ மட்டும்‌), மற்றும்‌ கூட்டுறவு வங்கி கோரும்‌ இதர ஆவணங்கள்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌. கல்விக்‌ கடனுக்கு விண்ணப்பிக்கும்‌ போது பள்ளி மாற்று சான்றிதழ்‌, உண்மைச்‌ சான்றிதழ்‌ (Bonofide certificate) கல்விகட்டணங்கள்‌ செலுத்திய இரசீது / செலான்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌ ஆகிய ஆவணங்களின்‌ ஒளிப்பட நகல்களையும்‌ சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌, என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, Sou. அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies