Type Here to Get Search Results !

ஜீவன்‌ ரக்சா பதக்க விருதுகள்‌ பெற விண்ணப்பங்கள்‌ வரவேற்பு


நீரில்‌ மூழ்கியவரை காப்பாற்றுதல்‌, விபத்துக்கள்‌, தீ விபத்துக்கள்‌, மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள்‌ தாக்குதல்‌, சுரங்கங்களில்‌ மீட்பு நடவடிக்கைகள்‌ போன்ற சம்பவங்களில்‌ ஒருவரின்‌ உயிரை காப்பாற்றும்‌ மனிதாபிமான இயல்புடைய சிறந்த செயல்களுக்காக ஜீவன்‌ ரக்சா பதக்க விருதுகள்‌ ஒருவரின்‌ உயிரை காப்பாற்றியதற்காக மூன்று பிரிவுகளின்படி வழங்கப்படுகிறது.

  1. சர்வோத்தம்‌ ஜீவன்‌ ரக்சா பதக்கம்‌ - மீட்பவரின்‌ உயிருக்கு பெரும்‌ ஆபத்து ஏற்படும்‌ சூழ்நிலையில்‌ ஆபத்து நிலையில்‌ உள்ளவரை விரத்துடன்‌ போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
  2.  உத்தம்‌ ஜீவன்‌ ரக்சா பதக்கம்‌ - துணிச்சலுடன்‌ தாமதமின்றி செயல்பட்டு மிகவும்‌ அபாயகரமான நிலையில்‌ உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
  3. ஜீவன்‌ ரக்சா பதக்கம்‌ - தனக்கு காயம்‌ ஏற்படினும்‌ வீரத்துடன்‌ தாமதமின்றி செயல்பட்டு உயிரைக்‌ காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.


இவ்விருதிற்கு அனைத்து தரப்பு பாலினத்தவர்களும்‌ விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்‌. ஆயுதப்படை, காவல்படை மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு படை விரர்கள்‌ இவ்விருதிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்‌. ஆனால்‌ அவர்களுடைய பணி நேரத்தில்‌ மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட மாட்டாது.



இவ்விருதிற்கான பரிந்துரைகள்‌ இரண்டு வருட காலத்திற்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அதாவது 01.40.2022க்கு பின்னர்‌ மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள்‌ மட்டுமே கணக்கில்‌ கொள்ளப்படும்‌. அதன்படி 2024ம்‌ ஆண்டிற்கான ஜீவன்‌ ரக்சா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. மேற்காணும்‌ விருதிற்கான விண்ணப்பம்‌ மற்றும்‌ முக்கிய விவரங்கள்‌ மாவட்ட விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலன்‌ அலுவலகத்தில்‌ பெற்று பூர்த்தி செய்து 21.06.2024 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ சமர்ப்பித்திட வேண்டும்‌, என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப. அவர்கள்‌. தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies