Type Here to Get Search Results !

பெரியாம்பட்டியில் விவசாய கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்ட தீயனைப்பு துறையினர். பத்திரமாக காப்பு காட்டில் விட்ட வனத்துறையினர்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி கிராமத்திற்க்கு, திங்கட்கிழமை விடியற்காலை உணவு தேடி வந்த 3 வயது மதிக்கதக்க ஆண் புள்ளிமான் ஒன்று, கேசவன் என்பவருக்கு சொந்தமான  40 ஆடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து, உயிருக்கு போராடி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது, அவ்வழியாக சென்றவர்கள்  மானின் அலறல் சத்தம் கேட்டு  ஓடி சென்று  பார்த்த போது  புள்ளிமான் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் மானை  பத்திரமாக பிக்கிலிகாப்பு காட்டில் உள்ள அடர் வனப்பகுதியில்  கொண்டு சென்று விட்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies