Type Here to Get Search Results !

பணி நிறைவு விழாவில் மை தருமபுரி அமரர் சேவைக்கு நன்கொடை வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்.


பணி நிறைவு விழாவில் மை தருமபுரி அமரர் சேவைக்கு நன்கொடை வழங்கிய ஆசிரியர், இது குறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், தருமபுரி காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வந்த சோ.தண்டபாணி அவர்கள் பணி நிறைவு பெற்றார். இவரது பணி நிறைவு விழாவில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 


தருமபுரியில் ஆதரவற்று இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்து வரும் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினருக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கி உதவி செய்தார். ஆதரவற்று இறந்தவர்களுக்கு உறவாய் இருந்து நல்லடக்கம் செய்ய இந்த நன்கொடை உதவியாக இருக்கும். இந்த நன்கொடையை மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தமிழ்செல்வன், சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 


நன்கொடை வழங்கிய ஆசிரியர் தண்டபாணி அவர்கள் பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி நீடூடி வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம். என்றென்றும் மனிதநேயமிக்க சேவையில் மை தருமபுரி அமைப்பினர், என அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies