Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா.


பாலக்கோட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா நகர தலைவர் தலைமையில் பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்தூபி மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாள் விழா நகர தலைவர் கணேசன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் சண்முகம்  முன்னிலை வகித்தார். ஸ்தூபி மைதானம் ரவுண்டானாவில்  உள்ள காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றினர். இதையடுத்து பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சீதாராமன் விவசாய அணி மாவட்ட தலைவர் அன்பழகன், எசிடியு மாநில தலைவர் கோவிந்தசாமி, செந்தில், பாலாஜிகுமார், வெங்கடேசன், கமால், கனகராஜ், சுப்ரமணி, கிருஷ்ணன், ராஜேந்திரன், துரைராஜ், ரகமத்துல்லா, வேடியப்பன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies