Type Here to Get Search Results !

மாரண்ட அள்ளியில் ராகுல் காந்தி 54 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


மாரண்டஅள்ளியில் பாலக்கோடு வட்டார காங்கிரஸ் மற்றும் மாரண்டஅள்ளி நகர காங்கிரஸ் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா பாலக்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மாரண்டஅள்ளி அங்காளம்மன் கோயிவிலில் ராகுல் காந்தி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாரண்டஅள்ளி இந்தியன் வங்கி அருகே 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட  கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஒன்றிய ஊராட்சி குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், மாவட்ட பொதுக்குழு செயலாளர் பொன்முடி(எ) நாராயணசாமி, மாரண்டஅள்ளி நகரத் தலைவர் பாலபார்கவன், வட்டாரச் செயலாளர் பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் வெற்றிச்செல்வன், முரளிதரன்,கோவிந்தராஜ், பரமசிவம் அங்கப்பன் புதூர் முனிராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies