Type Here to Get Search Results !

தனியார் பள்ளி வாகனமும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் பலி.


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே வள்ளுவர் குட்டை என்ற இடத்தில் தனியார் பள்ளி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பாப்பாரப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான இயேசுராஜா பள்ளி வாகனம், பள்ளி குழந்தகைளை இறக்கிவிட்டுவிட்டு பாப்பாரப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது  சஞ்சீவராயபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களின் இரு சக்கர வாகனுமும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.. 


உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மாங்காப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடாஜலம் (27) என்பதும் சஞ்சீவராயபுரம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும் தெரிய வந்திருக்கிறது, விபத்து தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies